Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! பீகாரில் பிரம்மாண்ட பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்தது!

Bihar Bridge Collapse
Prasanth Karthick
சனி, 17 ஆகஸ்ட் 2024 (12:41 IST)

பீகாரில் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வரும் நிலையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்று 3வது முறையாக மீண்டும் இடிந்து விழுந்துள்ளது. 

 

 

சமீப காலமாக பீகாரில் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் பீகாரில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. பீகாரின் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அந்த பாலத்தின் பணிகள் முடிவடையாமல் இருந்ததால் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

 

அதன்பின்னர் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பீகாரில் பாலம் கட்டுவதில் ஆளும் கட்சி செய்த மோசடிகளால்தான் பாலங்கள் தரமற்று கட்டுப்பட்டு, தற்போது இடிந்து விழுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

இந்நிலையில் தற்போது பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த அக்வனானி பாலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக இடிந்து விழுந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த பாலத்தின் பணிகளுக்காக இதுவரை 1,170 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் பாலம் முழுவதும் முடிக்கப்படாததும், இடிந்து விழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments