திருப்பதி மலை பாதையில் ஏற்கனவே இரண்டு சிறுத்தைகள் சிக்கிய நிலையில் தற்போது மூன்றாவது சிறுத்தைகள் சிக்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இனி பயம் இன்றி பக்தர்கள் மலைப்பாதையில் செல்லலாம் என்று கூறப்படுகிறது.
திருப்பதி மலை பாதையில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் இருந்தது என்றும் சிறுமி ஒருவர் சிறுத்தையால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் திருப்பதி மலைப்பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மூன்றாவது சிறுத்தை சிக்கி உள்ளது. இதனை அடுத்து திருப்பதி மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் பயம் இன்றி செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 50 நாட்களில் மூன்று சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் வனத்துறையின தெரிவித்துள்ளனர்.