Publish Date: Mon, 28 Sep 2026 (08:30 IST)
Updated Date: Mon, 28 Sep 2026 (08:32 IST)
வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர். கடந்த 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது என முதலில் அறிவிக்கப்பட்டது.
அதன்பின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 27ம் தேதியான நேற்று ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறந்திருக்கும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது..
இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் கூட்டமைப்பு இடையே நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டது.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதை எடுத்து நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உயர்மட்ட குழு அமைக்க சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க