Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி - திருமலை இடையே மின்சார பேருந்து: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (07:50 IST)
திருப்பதி - திருமலை இடையே மின்சார பேருந்து: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு!
திருப்பதி முதல் திருமலை வரை மின்சார பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மின்சார பேருந்து சேவை தொடங்கும் தேதி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
 
திருப்பதி திருமலை இடையே ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது என்பதும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது
 
இதனை அடுத்து விரைவில் பக்தர்களுக்கு இந்த பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டது.இந்த நிலையில் திருப்பதி முதல் மாலை வரை மின்சார பேருந்து சேவை செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
 
ஒலெக்ட்ரா என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த பேருந்து சேவையை வரும் 27ஆம் தேதி முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது 
 
சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இந்த பேருந்துகளுக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments