இந்தியாவில் ஏழு கட்டமாக மக்களவை தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இன்று 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. அதேபோல் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது
இன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து தற்போது பார்ப்போம். இன்று மொத்தம் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
பீகார்: 8 தொகுதிகள்
இமாச்சல பிரதேசம்: 4 தொகுதிகள்
ஜார்கண்ட்: 3 தொகுதிகள்
மத்திய பிரதேசம்: 8 தொகுதிகள்
பஞ்சாப்: 13 தொகுதிகள்
உத்தரபிரதேசம்: 13 தொகுதிகள்
மேற்குவங்காளம்: 9 தொகுதிகள்
சண்டிகார்: 1 தொகுதி
இன்றுடன் மொத்தம் 542 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைகிறது. வேலூர் மற்றும் திரிபுரா கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது