Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்குவங்கத்தில் தொடங்கியது 8வது கட்ட தேர்தல்: பலத்த பாதுகாப்பு

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (07:37 IST)
தமிழகம், புதுவை, கேரளா, அசாம் ஆகிய 4 மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே ஏழு கட்ட தேர்தல் முடிந்து விட்ட நிலையில் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் 8அம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
 
இன்று காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 35 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது என்பதும் தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அனைவரும் ஜனநாயக கடமையான தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது 
 
இன்றுடன் 5 மாநில தேர்தல் முடிவடைவதை அடுத்து, பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments