Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த்: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (07:31 IST)
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி சென்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
 
கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/ இந்த நிலையில் இந்த போராட்டத்தை  நிறுத்த அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தி வந்தாலும், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன 
 
இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழக எதிர்க்கட்சிகள் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் வெற்றிகரமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இருப்பினும் தமிழகத்தில் பாரத் பந்த் போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த பந்த் நடைபெறும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments