Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு எதிரொலி: டொயோட்டா கார் நிறுவனம் மூடப்படுகிறது

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (07:30 IST)
கொரோனா பாதிப்பு எதிரொலி: டொயோட்டா கார் நிறுவனம் மூடப்படுகிறது
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பகுதிநேரமாக இயங்கி வருகிறது என்றும் ஒரு சில தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா நிறுவனம் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தற்காலிகமாக ஆலையை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள டொயோட்டோ தொழிற்சாலை மூன்று வாரகால மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே டொயோட்டா கார் தொழிற்சாலை உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாளை முதல் அதாவது ஏப்ரல் 26 முதல் மே 14-ஆம் தேதி வரை 3 வாரங்களுக்கு ஆலையை மூடப்படுவதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது 
 
இந்த நாட்களில் ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த பின் ஆலை திரக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டொயோட்டா ஆலையில் பணி புரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments