Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

Siva
வியாழன், 2 ஜனவரி 2025 (18:20 IST)
டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 26 ஆம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இருந்து காஷ்மீரில் உள்ள பாரமுல்லா என்ற பகுதிக்கு இதுவரை நேரடி ரயில் சேவை இல்லாத நிலையில் 37 ஆயிரத்து 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் சேவைக்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

272 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரயில் சேவையில் உதம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லாவை இணைக்கும் வகையில் ரயில் தடம் அமையும். கடந்த சில ஆண்டுகளாக புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன

இந்த வழித்தடத்தில் வைஷ்ணவி கோவில் அடிவாரத்தில் மலையை குடைந்து சுமார் 3 கிலோமீட்டர் பாதை அமைக்கப்பட்டுள்ளது என்பதும் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டு  வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி - காஷ்மீர் பாரமுல்லா உள்ள இடையே இந்தியாவின் முதல் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

விஜய், சீமான், அன்புமணி, பிரேமல்தா கூட்டணி தான் 3வது அணியா? அதிமுக - திமுக கூட்டணிக்கு சிம்மசொப்பனம்?

ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்.. கூடுதல் விமானங்கள் ஏற்பாடு..!

இந்த வாரத்தில் இன்னும் ஒரு நல்ல நாள்.. பங்குச்சந்தை தொடர் ஏற்றம்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. மீண்டும் ரூ.72000 வந்தது ஒரு சவரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments