துணை ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்க்க மத்திய அரசு ஆலோசனை செய்துவருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் அவர்களுக்கு பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளது. இதனால் பல வேலைகளில் அவர்கள் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. இதையடுத்து இப்போது மத்திய உள்துறை அமைச்சகம், துணை ராணுவப் படைகளில் மூன்றாம் பாலினத்தவர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
இது சம்மந்தமாக ராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினத்தவர் என்ற பாலினமும் சேர்க்கப்பட்டுள்ளது.