Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறைவேற்றப்பட்டது முத்தலாக் மசோதா – எதிர்கட்சிகள் எதிர்ப்பு

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (19:18 IST)
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே இன்று மாநிலங்களவையில் முத்தலாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இது சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் செயலாகும் என விமர்சித்தன. ஓட்டு சேகரிப்பில் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவான ஓட்டுகள் அதிகமானதால் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமாரும் மக்களவையில் அதற்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் தாக்கல் செய்தார். ஆனால் அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் காங்கிரஸ், திமுக கட்சிகள் எதிராக வாக்களித்தன. இறுதியில் வாக்கு எண்ணிக்கையில் ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் கிடைத்தது. இதனால் முத்தலாக் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments