Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அடேங்கப்பா! ட்ரம்ப்புக்கு இந்தியாவுல இவ்வளவு சொத்துகளா?

அடேங்கப்பா! ட்ரம்ப்புக்கு இந்தியாவுல இவ்வளவு சொத்துகளா?
, திங்கள், 24 பிப்ரவரி 2020 (10:44 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இந்தியா வரும் நிலையில் இந்தியாவில்தான் அவர் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபட் டொனால்ட் ட்ரம்ப் இன்று இந்தியா வருகிறார். இதற்கான ஆயத்த பணிகள் கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ட்ரம்ப் இந்தியா வருவதே அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை ஈர்க்கதான் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாக்குகளை ஈர்க்க ட்ரம்ப் முயல்வதாக அமெரிக்க எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

அதிபராவதற்கு முன்பிருந்தே ட்ரம்ப் மிகப்பெரும் தொழிலதிபர். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ட்ரம்ப் மற்றும் குடும்பத்தாருக்கு பில்லியன் கணக்கில் சொத்துகள் உள்ளது. சொந்த நாடான அமெரிக்காவில் ட்ரம்புக்கு உள்ள சொத்துகளுக்கு பிறகு அதிகளவில் சொத்துகள் இருப்பது இந்தியாவில்தானாம்!

இந்தியாவின் முக்கிய நகரங்களான புனே, கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் ட்ரம்ப்புக்கு சொந்தமான “ட்ரம்ப் டவர்” எனப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்திய ரியல் எஸ்டேட்டில் ட்ரம்ப் பெருமளவில் முதலீடு செய்துள்ளார். மேலும் தொழிலதிபராக இருந்த காலத்திலிருந்தே இந்தியா மீது ட்ரம்புக்கு ஒரு ஈர்ப்பு உண்டாம். 1990ல் அவர் தொடங்கிய சூதாட்ட காசினோவுக்கு ‘ட்ரம்ப் தாஜ்மஹால்’ என்றுதான் பெயர் வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர்களை முறைக்கும் குழந்தை – உலக அளவில் ட்ரண்ட் ஆகும் புகைப்படம் !