Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க குடியுரிமையை கொஞ்சம் நிரூபிக்கிறீங்களா? – நோட்டீஸ் அனுப்பிய ஆதார் அமைப்பு

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (16:29 IST)
ஐதராபாத்தில் ஆதார் அட்டை பெற போலி ஆவணங்கள் கொடுத்ததாக குடியுரிமையை நிரூபிக்க சொல்லி யு.ஐ.டி.ஏ.ஐ கடிதம் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் ஆதார் பதிவு அமைப்பு அனுப்பியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஆதார் இணைப்புகளை, தகவல்களை சரிப்பார்ப்பதற்கும், மக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்குவதற்கும் செயல்படும் யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஐதராபாத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரும் ஒருவர். அந்த கடிதத்தில் “ஆதார் அட்டை பெறுவதற்காக அளிக்கப்பட்ட சான்றுகள் போலியானவை என தெரிவதாகவும், அதனால் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குடியுரிமை நிரூபிக்க கோரி யு.ஐ.டி.ஏ.ஐ கேட்பதற்கு உரிமை இல்லை என்று கூறியுள்ள ஆட்டோ டிரைவரின் வழக்கறிஞர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

500க்கு 500 மார்க்! பள்ளிக்கு செல்லும் சாமி சிலை! - ஹரியானாவில் நடக்கும் ஆச்சர்ய சம்பவம்!

மாடுகளுக்கு கூட பாதுகாப்பில்லை! பசுக்களுடன் உறவு கொண்ட இருவர் கைது!

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments