Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகளை பலாத்காரம் செய்த மாமனாரின் இன்ப வெறி:நாக்பூரில் கொடூரம்

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (13:11 IST)
நாக்பூரில் தனது மருமகளை பலாத்காரம் செய்த மாமனாரை, போலீஸார் கைது செய்துள்ளனர்.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின், நாக்பூரில் அமைந்திருக்கும் பகுதி நவுடா. இங்கே ஸ்வேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனது கணவர் பணிக்கு சென்ற நிலையில், தன்னுடைய மாமனாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து இருவரும் திரும்ப வீட்டிற்க்கு வரும் வழியில், மாமனார் ஸ்வேதாவை ஆளவரமில்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்பு ஸ்வேதாவை கட்டாயப் படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.

ஸ்வேதா இந்த விஷயத்தை யாரிடமும் கூறவில்லை. பின்பு இரண்டு நாட்கள் கழித்து, வீட்டில் ஸ்வேதா தனியாக இருந்தபோது, மாமனார் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இதற்கு மேல் பொறுமையிழந்த ஸ்வேதா, தனது கணவரிடம் நடந்த விஷயங்களை கூறியுள்ளார். சம்பவத்தை கேட்டறிந்த ஸ்வேதாவின் கணவர் உடனே நவுடா பகுதியிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பின்பு இந்த புகாரை தொடர்ந்து போலீஸார், ஸ்வேதாவின் மாமனாரை கைது செய்தனர்.

இந்தியாவில் இது போன்ற மாமனார்களால் மருமகள்கள் பெரும் தொல்லையை அனுபவிக்கிறார்கள். சிலர் மட்டுமே தனக்கு நேர்கின்ற கொடுமையை கணவரிடம் வெளிப்படையாக கூறுகின்றனர். பலரும் குடும்பத்தின் கௌரவத்தை மனதில் எண்ணி வெளியில் சொல்வதில்லை.

இந்நிலையில் நாக்பூரில் நடந்த இந்த சம்பவம், குடும்பத்திற்குள் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை, சம்பந்தப்பட்ட பெண்கள் தைரியமாகவும் துணிச்சலாகவும் வெளிப்படுத்தவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்