Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய இணையமைச்சர் ஷோபாவின் காரில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Sinoj
திங்கள், 8 ஏப்ரல் 2024 (20:11 IST)
பெங்களூரில் மத்திய இணையமைச்சர் ஷோபாவின் காரில் மோதிய விபத்தில் பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார்.
 
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணாமுல், சமாஜ்வாடி, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  இன்று பெங்களூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய இணையமைச்சர் ஷோபா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது  காரில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
 
பின்னால் இரு சக்கரம் வாகனம் வருவதைப் பார்க்காமல், கார் கதவறை திறந்ததாக கூறப்படுகிறது. இதில், பிரகாஷ்(62) கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
 
அப்போது பின்னால் வந்தால் வந்த பேருந்து அவர் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த போலீஸார் ஷோபாவின் காரைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments