Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

Mahendran
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (10:58 IST)
அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக, இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க செனட்டர் அதிபர் டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்திய இறக்குமதிகள் மீது 50% வரி விதித்த டிரம்ப்பின் முடிவுக்கு அமெரிக்காவின் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இது குறித்து அமெரிக்க செனட்டர்  தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இந்த பிடிவாதமான வரி விதிப்பு, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கவனமாக உருவாக்கப்பட்ட வலுவான உறவைப் பாதிக்கும் அபாயம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும், இந்தியா - அமெரிக்கா இடையே ஆழமான பொருளாதார உறவுகள் இருப்பதாகவும், இரு தரப்புக்கும் மரியாதை அளிக்கும் வகையில் இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வரிவிதிப்பை நாங்கள் சமாளித்து கொள்வோம்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்..!

இல. கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு... சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

ட்ரம்ப்க்கு இந்தியாவில் இருப்பிடச் சான்று! போலி ஆதாருடன் விண்ணப்பம் பதிவு!

பங்குச்சந்தை இன்றும் சரிவு.. ஆனால் நேற்று நடந்த மேஜிக் இன்றும் நடக்குமா?

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.560 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments