உத்தர பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் வன்கொடுமையில் உயிரிழந்த பெண்ணின் தாயாருக்கு காங்கிரஸ் சீட் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரம் மற்றும் தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியமைக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் மறுபுறம் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் போட்டியிட காங்கிரஸ், உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தாயாரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்பதால் பாஜகவை எதிர்த்து போட்டியிட இந்த வியூகம் கைகொடுக்கும் என காங்கிரஸ் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.