Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 6 கோடி பரிசு! – யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு!

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (12:37 IST)
ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி பரிசளிக்கப் போவதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானில் தொடங்க இருக்கிறது. பல்வேறு நாட்டிலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகள் சென்ற ஆண்டு பல்வேறு நாடுகளில் நடைபெற்றன.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் உத்தர பிரதேச வீரர்கள், வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அதன்படி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கம் வெல்பவர்களுக்கு 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்பவருக்கு 4 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வெல்பவருக்கு 2 கோடி ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்தியா சார்பாக ஜப்பான் ஒலிம்பிக்கில் பங்குபெறும் உத்தர பிரதேச வீரர்களுக்கு 10 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

திடீர் திருப்பம்.. டாஸ்மாக் வழக்கை திரும்ப பெற்றது திமுக அரசு.. என்ன காரணம்?

கே.என்.நேரு சகோதரரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.. கைதாவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments