Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோலி வண்ணங்களை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்: உ.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து

Mahendran
வெள்ளி, 14 மார்ச் 2025 (11:40 IST)
ஹோலி வண்ணங்களை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என உத்தரபிரதேசம் மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
 
கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவர் கூறியதாவது:
 
"வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மக்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்வது வழக்கம். அதுபோல், ஒற்றுமையை போற்றும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். இதை சில அரசியல்வாதிகள் விரும்பவில்லை. தங்கள் மனதில் நஞ்சு கொண்ட சிலர் மக்களை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர். அவர்களுக்கு பிரச்சனை இருந்தால், கதவுளை அடைத்துக்கொண்டே இருக்க வேண்டாம். நாட்டை விட்டு வெளியேறலாம்." என்று கூறியுள்ளார்.
 
அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்திய முஸ்லிம் ஜமாத் தேசிய தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
"வெறுப்பை பரப்பும் வகையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட யாருக்கும் உரிமை இல்லை. இது, அமைச்சராக இருப்பவருக்கும் பொருந்தும். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, ‘நிறங்களை தவிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என்று பிரமாணம் செய்யவில்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments