Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பழைய நாடாளுமன்ற கட்டிடம் தான்: உத்தவ் தாக்கரே கட்சி எம்பி.!

Siva
வியாழன், 29 பிப்ரவரி 2024 (16:24 IST)
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று சிவசேனா கட்சியின்  உத்தவ் தாக்கரே பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் பேசியுள்ளார்.

புதிய பாராளுமன்ற கட்டிடம் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் கூட்டத்தொடரை நடத்துவோம் என சஞ்சய் ரௌத் பேசியுள்ளார்

மேலும் புதிய நாடாளுமன்றம் 5 நட்சத்திர சிறை போன்ற உள்ளது என்றும் அங்கு யாரும் வேலை பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் இந்திய வேளாண் அமைச்சர்களில் மிகவும் சிறந்தவர் என சரத் பவாரை பிரதமர் மோடியே ஒருமுறை குறிப்பிட்டு இருந்தார் என்றும் ஆனால் தற்போது அவரது கட்சியை மோடி உடைத்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்

பிரதமர் மோடி 400 தொகுதிகளில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறுவதற்கு பதிலாக 600 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறி இருக்கலாம் என அவர் கிண்டலுடன் குறிப்பிட்டார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments