Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சந்திரனில் சாய்ந்த நிலையில் இறங்கிய விக்ரம்- சிக்னலை மீட்டெடுக்க முயலும் இஸ்ரோ!

சந்திரனில் சாய்ந்த நிலையில் இறங்கிய விக்ரம்- சிக்னலை மீட்டெடுக்க முயலும் இஸ்ரோ!
, திங்கள், 9 செப்டம்பர் 2019 (18:04 IST)
சந்திரனில் இறங்கும் போது சிக்னலை இழந்த விக்ரம் லேண்டர் நல்லபடியாக உள்ளதாகவும், தகவல் தொடர்பை மீட்டெடுக்க முயற்சித்து வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நிலவின் தென்பகுதியை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்க 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது தொடர்பை இழந்தது. இது உலக நாடுகள் முழுவதிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்பதை கண்டறிய ஆர்பிட்டர் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது.

அதில் விக்ரம் லேண்டர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிலிருந்து 500 மீட்டர் தள்ளி தரையிறங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அது சற்றே சாய்ந்தபடி நிலவில் இறங்கியுள்ளது. மற்றபடி அது உடையாமல் இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த செய்தி இந்திய மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன்மூலம் வெற்றிகரமாக நிலவின் தெந்துருவத்தை ஆராய்ச்சி செய்த புகழும் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்ற மாணவன்... தீப்பிடித்ததால் விபரீதம்