Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மோட்டார் வாகன சட்டம்: 4 நாட்களில் ரூ.1.14 கோடி வசூல்:

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (06:30 IST)
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகள் ஒருசில மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்த நான்கே நாட்களில் ஹரியானா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் ரூ.1.41 கோடி அபராத தொகை வசூலாகியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி, அதிக அபராதம் மற்றும் கடுமையான விதிகளுடன் நாடாளுமன்றத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதா செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த மசோதாவை அமல்படுத்திய 4 நாட்களில் ஹரியானா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்களில் ரூ.1.41 கோடி அபராத தொகை வசூல் ஆனதாக அம்மாநிலங்களில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஒடிசாவில் 88.90 லட்சம் வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அனைத்து மாநிலங்களிலும் இந்த புதிய சட்டதிருத்தம் அமலுக்கு வரும் பட்சத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதிக அபராதம் என்பது மக்களின் பணத்தை கைப்பற்றுவது என்று அர்த்தம் கொள்ளாமல் சாலை விதிகளை முறையாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதும், ஒரு ரூபாய் கூட அபராதம் வசூலிக்கப்படக்கூடாது என்பதே அரசின் எண்ணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
சாலைவிதிகளை மீறுவதால் வாகன ஓட்டுபவர்கள் மட்டுமின்றி சாலையில் நடந்து செல்லும் அப்பாவிகளும் பாதிக்கப்படுவதால் இந்த மசோதாவை கடுமையாக கடைபிடிப்பதில் இருந்து அரசு பின்வாங்கப்போவதில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிக அபராதம் ஒருமுறை கட்டிவிட்டால், அந்த நபர் வாழ்நாள் முழுவதும் சாலை விதிகளை மீற மாட்டார் என்றே கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments