உலகின் ஒரு சில பகுதிகளில் மூன்றாவது அலையின் அறிகுறி தொடங்கிவிட்டதாக நிதி ஆயோக் உறுப்பினர் தலைவர் வி கே பால் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தியா உட்பட பல நாடுகளில் இன்னும் இரண்டாவது அலையில் தாக்கமே முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சில நாடுகளில் மூன்றாவது அலையின் அறிகுறி தொடங்கி விட்டதாகவும் இதனால் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் அவர்கள் தெரிவித்துள்ளார்
மூன்றாவது அலையில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க வேண்டுமானால் அரசு கூறும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மாஸ்க் அணியும் பழக்கம் குறைந்து உள்ளது என்றும் மாஸ் அணியாமல் வீட்டை விட்டு யாரும் வரக்கூடாது என்றும் கண்டிப்பாக பொதுவெளியில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இதனை கடைபிடித்தால் மட்டுமே மூன்றாவது அலையில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க முடியும் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் அவர்கள் கூறியுள்ளார்