Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (07:05 IST)
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்று காலை 7 மணி முதல் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய இன்று அதிகாலை முதலே வரிசையில் நிற்க தொடங்கினர்.
 
மஹாராஷ்ட்ரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்பட 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பதட்டமான தொகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுளது. இன்று நடைபெறும் தேர்தலில் 14,21,61,000 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் 1,279 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments