சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி, சனாதனம் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது பேச்சு அரசியலில் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், பாஜக உள்ளிட்ட கட்சிகள் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் சனாதனம் பற்றி பேசி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக உதயநிதி மீது பிகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல் உதயநிதி, சனாதனம் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என டெல்லி பாஜக கடிதம் எழுதியிருந்தது.
இதுகுறித்து உதயநிதி அளித்துள்ள பேட்டியில்,
சாதியை வைத்துக் கொண்டு கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருந்ததற்கு எதிராக போராட்டம் நடத்தினோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு இருந்த நிலையில் அதை மீறி உரிமை பெற்றுத் தந்திருக்கிறோம். சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்று அன்று தெரிவித்ததைவிட இன்று அதிக உறுதியுடன் இருக்கிறேன். நான் பேசியது யூடியூப்பில் உள்ளது எத்தனை வழக்குகள் வந்தாலும் அதைப் பார்த்துக் கொள்ளலாம்…..நான் மதத்திற்கு எதிராய் பேசவில்லை மதத்தில் உள்ள சாதிய பாகுபாடுகளை ஒழிக்கத்தான் பேசினேன் என்று கூறியுள்ளார்.