Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டமைக்கப்பட்ட கதைகளுக்கு பயப்பட மாட்டேன்.. பாலியல் புகார் குறித்து மே.வங்க ஆளுனர்..!

Siva
வெள்ளி, 3 மே 2024 (07:59 IST)
மேற்குவங்க ஆளுநர் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்ட நிலையில் கட்டமைக்கப்பட்ட புகார்கள் குறித்து பயப்பட மாட்டேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேற்குவங்க ஆளுநர் சிவி ஆனந்த் போஸ் என்பவர் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கு மேற்குவங்க ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில் ’கட்டமைக்கப்பட்ட கதைகளுக்கு நான் பயப்பட மாட்டேன் என்றும் யாரேனும் என்னை இழிவுபடுத்தும் தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால் அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குற்றச்சாட்டு வைத்த ஊழியர் அரசியல் கட்சி நபர் போல் செயல்படுகிறார் என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநில ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்