மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் எனவே அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர பரிந்துரை செய்வதாக கவர்னர் கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் என்ற நகரில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மேற்கு வங்க மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த அறிக்கையில் மாநிலத்தில் நிலவும் மோசமான சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேரடியாக மத்திய அரசே இந்த மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும் என்றும் நிலைமை மோசமாகும் பட்சத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த படலாம் என்றும் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இன்னும் மோசமாக வாய்ப்பிருப்பதாகவும் எனவே குடியரசு தலைவர் ஆட்சி அமலாக்கப்படலாம் என்று கவர்னர் எழுதிய கடிதம் தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கலவரம் ஏற்பட்ட பகுதி மற்றும் எல்லை பகுதி காவல் பகுதிகளில் நிரந்தரமாக மத்திய அரசின் படைகளை நியமிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அந்த பரிந்துரையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கவர்னரின் இந்த பரிந்துரைகள் அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் விரைவில் மேற்குவங்க அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.