Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

Impotent' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதிமுகவினர்களுக்கு டியூஷன் எடுத்த குருமூர்த்தி

Impotent' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதிமுகவினர்களுக்கு டியூஷன் எடுத்த குருமூர்த்தி
, செவ்வாய், 26 டிசம்பர் 2017 (22:15 IST)
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி முதல்வரையும் துணை முதல்வரையும் ஆண்மையற்றவர் என்று கூறியதாக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்திக்கு கடும் எச்சரிக்கையே விடுத்துள்ளார்.

இந்த நிலையில் Impotent'  என்றால் என்ன அர்த்தம் என்றும், தான் எந்த அர்த்ததுடன் அந்த வார்த்தையை விளக்கினேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறியதாவது:

முதலில் Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையானது impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது. நான் டுவிட்டரில் எழுதியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி டுவிட்டர் பதிவு செய்ய முடியாது.

இரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்றபடி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனர்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.

மேலும் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் impotent என்ற வார்த்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட வார்த்தை என்று கூறிய குருமூர்த்தி தான் கூறியதில் எந்த தவறோ கண்ணிய குறைவோ கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டார்ச் வெளிச்சத்தில் 32 பேருக்கு அறுவை சிகிச்சை