Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் கொடுத்து வெற்றி பெற நினைக்கும் காங்கிரஸ்?

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (14:52 IST)
கர்நாடக சட்டசபை தேர்தல் அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியாக காங்கிரஸும், எதிர்கட்சியாக பாஜகவும், மூன்றாவது பெரிய கட்சியாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் உள்ளது. கருத்து கணிப்பின் படி, கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையக்கூடும் என செய்திகள் வெளியாகின்றன.
 
தேர்தலில் வெற்றி பெற கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸும், பாஜகவும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மங்களூருவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் காவிரி நீரை பாதுகாத்தல், வேலைவாய்ப்புத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் போன்றவை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த தேர்தல் அறிக்கை காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments