Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலன் முகத்தில் ஆசிட் ஊற்றிய காதலி – ஏன் தெரியுமா ?

Webdunia
திங்கள், 28 அக்டோபர் 2019 (09:08 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் 6 மாத காலமாக தன்னைக் காதலித்து வந்த ஆண் கல்யாணத்துக்கு சம்மதிக்காததால் அவர் முகத்தில் ஆசிட் ஊற்றியுள்ளார் ஒரு இளம்பெண்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பைசாத் எனும் இளைஞர். இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 6 மாத காலமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன் இருவரும் பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதன் பிறகு தினமும் அந்த பெண் தனது காதலனுக்கு போன் செய்து தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளுமாறு தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பெண்ணின் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார் பைசாத்.

இதனால் கோபமான அந்த பெண் பைசாத் தனது வீட்டுக்கு அருகே இருக்கும் கடையருகே நின்று கொண்டிருந்த போது தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து பைசாத்தின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் பைசாத்தின் முகம் மற்றும் கண்களில் ஆழமானக் காயங்கள் உருவாகியுள்ளன. இதையடுத்து பைசாத்தின் தாயார் அளித்த புகாரின் பேரில் இளம்பெண் 326 A என்ற பிரிவின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பைசாத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள பெண் விசாரணையில் காதலன்தான் தனக்கு தொல்லைக் கொடுத்த்தாகவும் தங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாலும் இவ்வாறு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments