Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் ஆசீர்வதிப்பில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது - எடியூரப்பா

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (16:40 IST)
கர்நாடகா தேர்தல் முடிவுக்கு பின் எடுயூரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 


 
நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.
 
பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜக 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும் காங்கிரஸ் மஜக கட்சி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிப்பதாக கூறியது. 
 
காங்கிரஸ் கட்சியின் அழைப்பை மஜக கட்சி ஏற்றுக்கொண்டது. அதன்படி மஜக கட்சியின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமியை தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் முன்வந்துள்ளது. 
 
இதனால் பாஜகவின் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:-
 
மக்கள் மாற்றித்திற்காக வாக்களித்துள்ளனர். மக்கள் ஆசீர்வதிப்பில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் உள்ளது இந்த தேர்தலின் முடிவுகள் மூலம் தெரிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
 
எடியூரப்பா, தேர்தல் முடிவுக்கு பின் விமானம் மூலம் டெல்லி சென்று பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பேன் என்று நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments