Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது: முன்னாள் முதல்வர்

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (09:43 IST)
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இப்போதே அங்கு தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெங்களூரில் நேற்று செயற்குழு கூட்டத்தில் பேசிய எடியூரப்பா மத்திய, மாநில அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 130 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்றும் பேசினார்.
 
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே முதல்வர் போட்டி தொடங்கி விட்டதால் கர்நாடக மாநிலத்தில் பாஜக வெற்றி பெறுவது எளிதாக உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
பசுவதை தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளோம், அயோத்திகள் ராமர் கோயில் கட்டுகிறோம் ஆகிய சாதனைகளை பாஜக செய்துள்ளது என்றும் அதனால் எந்த ஒரு கட்சியின் ஆதரவு இல்லாமல் பாஜக தனித்து ஆட்சிக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments