Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு விடுமுறை.. தீவிரமாகும் பருவமழை..!

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (13:12 IST)
கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் மூன்று மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
 
 கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மீண்டும் மழை குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டையம், பத்தணம்திட்டா ஆகிய மூன்று மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் இன்று முதல் நான்கு நாட்கள் கேரளா முழுவதும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வெற்றி: எலான் மஸ்க் சொத்து மதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டாலர்கள் உயர்வு..

இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

சபரிமலையில் மண்டல பூஜை.. தமிழகத்தில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்..!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்துவேன்: டிரம்பின் வீடியோ வைரல்...!

அடுத்த கட்டுரையில்
Show comments