Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடு தப்ப முயன்ற ரானாகபூர் மகள் தடுத்து நிறுத்தம்: அதிரடி நடவடிக்கை

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (20:54 IST)
வெளிநாடு தப்ப முயன்ற ரானாகபூர் மகள் தடுத்து நிறுத்தம்
வாராக்கடன் காரணமாக எஸ் வங்கி தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் அந்த வங்கியை தற்போது ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. எஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை ஸ்டேட் வங்கி வாங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி எஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டில் இருந்து ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிப்பும் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சற்று நிம்மதியைத் தந்துள்ளது
 
இந்த நிலையில் எஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் எஸ் வங்கி நிறுவனர் ரானா கபூரின் மகள் ரோஷினி கபூர் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்ல முயன்றதாகவும் ஆனால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
பண மோசடி வழக்கில் ரானா கபூர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மகளிடமும் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதால் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாத வண்ணம் தடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எஸ் வங்கி நிறுவனரான ரானாகபூரின் மகள் ரேஷ்மி கபூர் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments