Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த தலைமை யார்? மோடி vs யோகி: வைரல் டாக்

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (14:53 IST)
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் பல இடங்களில் மோடி அலை வீசியதால் பாஜக, கூட்டணி கட்சிகளின் துணை இல்லாமலேயே மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. 
 
இதனால், மோடி மீதான எதிர்ப்பார்ப்பு கட்சியினருக்கும் மக்களுக்கும் அதிக அளவில் இருந்தது. ஆனால், இப்போது இந்த 5 தேர்தல் முடிவுகள் மூலம் அனைத்தையும் இழந்துவிட்டார் மோடி. 
 
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வங்கிகளின் வாராக்கடன், பெரிய தொழிலதிபர்களுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி, ரபேல் ஊழல், பெட்ரோல், டீசலின் கடுமையான விலை உயர்வு, சமையல் எரிவாயுவின் விலை உயர்வுஎன அனைத்தும் மோடியின் இமேஜை டேமேஜ் ஆக்கியது. 
இந்த ஐந்து மாநில தேர்தல் தோல்விக்கு முழுக்க முழுக்க மோடியே காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துகின்றனர். இந்நிலையில் கட்சிக்குள்ளேயே மோடிக்கு எதிராக யோகியின் ஆதரவாளர்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். இது பாஜக தலைமையகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
 
ஆம், மோடியை பிரதமர் பதவியில் இருந்து இறக்கி, அந்த இடத்தில் யோகியை வைக்க வேண்டும் என உபி மாநிலத்தை சேர்ந்த இந்துத்துவா அமைப்புகள் களத்தில் குதித்துள்ளன.
 
மேலும், போஸ்டர்கள், சமூக வலைதங்களில் #Yogi4PM ஹேஸ்டேக் போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதாவது வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யோகியை பிரதமராக முன்னிறுத்தும் நோக்கில், அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இந்த செயலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது மோடிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments