காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 16 வயது சிறுமி உள்பட 3 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காஷ்மீர், ரெட்வானி என்ற பகுதியில் ராணுவத்தில் ரோந்து வாகனங்கள் மீது சிலர் கல் வீழி தாக்குதல் நடத்தியுள்ளனர். ராணுவத்தினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16வயது சிறுமி உள்பட 3பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கலவரம் தொடரும் என்ற காரணத்தினால் அந்த பகுதியில் செல்போன் மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த ஜம்மூ - காஷ்மீர் மாநில ஆளுநர் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2016ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட புர்கான் வானி நினைவு தினம் வர உள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.