சூட்கேஸில் இளம் பெண் பிணம்.. ராகுல் காந்தி பாத யாத்திரையில் கலந்து கொண்டவர்..!

Siva
ஞாயிறு, 2 மார்ச் 2025 (09:19 IST)
ஹரியானா மாநிலத்தில் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் அடைக்கப்பட்ட சூட்கேஸை, ஒரு நபர் அங்கு வைத்து சென்றதாகவும், அதை ஒரு விழிப்புடன் இருந்த மற்றொருவர் கவனித்து, உடனே காவல்துறைக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிய வருகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த இளம்பெண்ணின் கழுத்தில் வெட்டு காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, அந்த பெண்ணின் பெயர் ஹிமானி நர்மல் எனவும், காங்கிரஸ் தொண்டராக செயல்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாத யாத்திரையில் அவர் பங்கேற்றிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவரை கொலை செய்து சூட்கேஸில் வைத்தது யார் என்பதையும், சம்பவத்தின் பின்னணி என்ன என்பதையும் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments