Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த பிரதமர் யார் ? – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் !

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (10:55 IST)
நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை சரியாக கணித்து சொல்லும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்யும் உணவின் விலையில் தள்ளுபடி அளிக்கப்படும் என சொமாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 

தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதனையடுத்து இந்தக் கருத்துக்கணிப்புகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஆன்லைன் உணவக நிறுவனமான சொமாட்டோ யார் அடுத்த பிரதமர் என்பதை சரியாகக் கணித்து சொல்லும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் சொமாட்டோ தேர்தல் லீக் போட்டியில் கலந்துகொண்டு இந்த ஆஃபர்களை பெற முடியும். சரியாகக் கணித்த வாடிக்கையாளர்களுக்கு 40 சதவீதம் பணம் திரும்ப சொமாட்டோ வாலட்டிற்கு அனுப்பப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments