Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

Sinoj
செவ்வாய், 19 மார்ச் 2024 (15:05 IST)
பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
 
பதஞ்சலி நிறுவனம் பல தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி கடந்த மாதம் வழக்குத் தொடரப்பட்டது.
 
இவ்வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட் பதிலளிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
 
பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகாளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல் பரப்புவது குறித்து உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காததால், அந்த நிறுவனத்தின் இணை  நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில்   இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் நோட்டீஸுக்கு பதில் அளிக்காத பதஞ்சலி பதிலளிக்காததை கண்டித்த நீதிபதிகள், ஏன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்று கேள்வி எழுப்பினர். பின்னர், பதஞ்சலி இணை  நிறுவனர் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராவதற்கான தேதியை அறிவிப்போம் என்று தெரிவித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments