Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்ட துத்தி செடி !!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:31 IST)
கீரை வகையைச் சேர்ந்த இந்த துத்தியில் கருந்துத்தி, சிறுதுத்தி, நிலத்துத்தி, இலைகள் துத்தி என பலவகை உண்டு. இருப்பினும் இதில் எது வேண்டுமென்றாலும் சமயத்திற்குத் தக்கபடி பயன்படுத்தலாம்.


துத்தியின் வேர், பூ, இலை மட்டை என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்ட செடியாகும். மற்ற கீரைகளை போன்று சமைத்து அளவாக சாப்பிடலாம். மலத்தை இளக்கி வெளியேற்றவும், உடல் புண்ணை குணமாக்கவும் உடலை தேற்றவும் இயற்கை மருத்துவத்தில் பெரும் பயன் அளிக்கிறது.

துத்திக் கீரை மூல நோயாளிகளுக்குக் கைகண்ட மருந்தாகப் பயன் பட்டு நிவாரணம் அளிக்கிறது.

துத்தி இலைகளை விளக்கெண்ணெய்யுடன் மண் பாத்திரத்தில் வதக்கி வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து டயாப்பர் (கோவனம்) போன்று கட்டி கொண்டால் ரத்த மூலம், கீழ் மூலம், வலி, குத்தல், எரிச்சல், மூலவீக்கம், அனைத்தும் சரியாகி நலம் உண்டாகும்.

துத்தி வேர் பவுடர், திரிபலா, இந்துப்பு, லவங்கபட்டை பொடிகளுடன் தண்ணீரில் கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பல் ஈறுகளில் ரத்த கசிவு குணமாகும். துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடு நீங்கும். ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்து சாப்பிட முற்றிலும் குணமாகும்.

அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றையும் கலந்து கிண்டி, கட்டிகள் மீது பூசினால் பழுத்து உடைந்து குணமாகும். துத்தி பூ சூரணத்தை நாட்டுச் சர்க்கரை, நாட்டு மாட்டு பாலில் கலந்து முறையாக சாப்பிட்டால் ரத்த கெந்தி, நுரையீரல் கபம், இருமல், காசநோய், இரைப்பு போன்ற குறைகள் முற்றிலும் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments