கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.
* பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
கரிசலாங்கண்ணி கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும், இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
* மஞ்சள் கரிசலாங்கண்ணியின் இலைகளை ஆய்ந்து எடுத்து பருப்புடன் சேர்த்து வேக வைத்து சாம்பாராகவும், கூட்டுக்கறியாகவும், பொரியலாகவும், கடையலாகவும், செய்து உணவோடு சேர்த்து உண்ணலாம். புளி சேர்க்கக் கூடாது. மிளகாய்க்குப் பதில் மிளகு சேர்க்க வேண்டும்.
* கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கதிற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது.
* இதன் இலையை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து 25 மிலி வீதம் காலை, மாலை அருந்தி வர கல்லீரல் சுத்தம் அடையும், காமாலை நோய் குண்மாகும்.
* குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.