Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையில் உள்ள பேன் மற்றும் பொடுகை போக்கும் அற்புத குறிப்பு !!

Webdunia
பேன் தொல்லையும் பொடுகு தொல்லையும், சில பேருக்கு நிரந்தரமாக போகவே போகாது. அப்படியே பொடுகுத் தொல்லை பேன் தொல்லையில் இருந்து விடுபட செயற்கை முறையில் ஏதேனும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும், ஒருமுறை பயன்படுத்தினால் தலையில் இருக்கும் பொடுகு போய்விடும். ஆனால் நிரந்தரமாக போகாது.

இதற்கு தீர்வு காண நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சில பேருக்கு  நல்லெண்ணெய் குளிர்ச்சி தரும் என்பதால், உடலுக்கு ஒத்து வராதவர்கள், தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி கொள்ளலாம்.
 
ஒரு சிறிய கப் அளவு நல்லெண்ணெய்யை எடுத்துக் கொண்டால், 6 லிருந்து 7 பல் பூண்டுகளை தோல் உரித்து, அந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவக்கும் வரை எண்ணெயை நன்றாக சூடு படுத்துங்கள். அதன் பின்பு இதை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். 
 
எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டோடு இருக்கும்போதே, எடுத்து உங்களது தலைகளில் வேர்க்கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து, இரண்டு மணிநேரம்  வரை ஊறவிட்டு விடுங்கள். குறைந்தது 15 நிமிடங்களாவது மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு சீயக்காய் போட்டு தலையை நன்றாக தேய்த்து கசக்கி குளித்து  விட்டு, ஈர தலையிலேயே பேன் சீப்பை வைத்து தலையை சீவினால் தலையில் இருக்கும் பேன் பொடுகு அத்தனையும் உங்கள் தலையை விட்டு நீங்கிவிடும். 
 
பேனுக்கு பூண்டின் வாடை சுத்தமாக பிடிக்காது. உங்கள் தலையை விட்டு வெளியேறி விடும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதே எண்ணெயை மீண்டும் மீண்டும் தலைக்கு பயன்படுத்தி வந்துகொண்டே இருந்தால், நிரந்தரமாக உங்கள் தலையில் பேன் பொடுகு பிடிக்காது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments