Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை அற்புத சத்துக்கள் இந்த ஒரே கீரையில் உள்ளதா....?

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (12:59 IST)
முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.


முருங்கைக்கீரையோடு, பூண்டு, மஞ்சள், உப்பு, மிளகு சேர்த்து அரைத்து உண்டால் நாய்க்கடி குணமாகும். முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். முருங்கை இலையை எடுத்துவிட்டு காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றது.

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டியாகும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைக்கீரை மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக்கீரையை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்கீரை சூப் மூட்டு வலியையும் போக்க வல்லது. கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவித்து பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments