Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்ற சத்துக்களை கொண்டுள்ள அவகேடோ பழம்...!!

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (18:09 IST)
அவகேடோ பழம் தோல் வறட்சியை தடுப்பதோடு, ஆரோக்கியமான தோல் செல்கள் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இப்பழத்தின் சாறு அல்லது மில்க் ஷேக் தினமும் மூன்று அல்லது நான்கு முறை எடுத்துக் கொண்டால், வறண்ட சருமத்தில் வியத்தகு மாற்றம் ஏற்படுகிறது.


அவகேடோவில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பீட்டா கரோட்டின் போன்ற பிற நன்மை பயக்கும் கொழுப்பில் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்ற சத்துக்களை உடல் கிரகிக்க உதவுகிறது. எனவே, வயது மூப்பின் காரணமாக ஏற்படும் வளர்சிதை மாற்ற அபாயத்தைக் குறைக்க அவகேடோ உகந்தது.

எலும்புகளை வலுப்படுத்த தேவையான வைட்டமின் கே ஊட்டச்சத்து அவக்கோடாவில் கணிசமாக உள்ளது. கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ரோஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது.

மூப்படைதலை தடுத்து இளமையை தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments