Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்கும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்...!

Webdunia
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
முதுமையைத் தடுக்க உதவும் மற்றொரு ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை: 
 
வாழைப்பழத்தில் பன்னீர் சில துளிகள் விட்டுப் பிசைந்து அதனை ஃபேஸ் மாஸ்க்காகப் போட்டு அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம்  விட்டு பிறகு கழுவலாம்.
 
வாழைப்பழத்தைக் குழைத்து, ஃபேஸ் மாஸ்க்காகப் போடவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். சருமம் வறண்டு போயிருந்தால், இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் முகப் பொலிவு பெற, ஒரு டீஸ்பூன் வைட்டமின் E காப்சூலை உடைத்து அப்படியே  அதிலுள்ளவற்றை ஊற்றிக் கலக்கினால் போதும். இதனால் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வாழைப்பழம்  உதவுகிறது.
உங்கள் முகத்திலோ முகப்பரு உள்ள பகுதிகளிலோ வாழைப்பழத் தோலின் உட்பகுதியை வைத்துத் தேய்த்தால் போதும். அழற்சியைக் குறைக்கிறது. பிசைந்த வாழைப்பழத்துடன் மஞ்சள் பொடி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தும் ஃபேஸ் மாஸ்க் போடலாம். அது  முகப்பருக்களை ஒழிப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் கொடுக்கும்.
 
கரும்புள்ளிகளின் மீது வாழைப்பழத் தோலைத் தேய்த்தால் அல்லது பிசைந்த வாழைப்பழத்தையே தேய்த்தால் வயதாவதால் தோன்றும்  புள்ளிகளும், கரும்புள்ளிகளும், முகப்பரு வடுக்களும் குறைகின்றன. விரைவில் பலன் பெற, இதை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்ய  வேண்டும்.
 
ஒரு வாழைப்பழத்துடன் (பூவன் பழம்) சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும்  தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.
 
இந்த வாழை - வெள்ளரி கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும்.  எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பிளீச்சிங் செய்தது போல் முகம் பளிச்சிடும்.
 
வாழைப்பழத்தையும் வெண்ணெய்ப்பழத்தையும் ஒன்றாகப் பிசைந்து முகத்திலும் கழுத்திலும் மாஸ்க் போடவும். சுமார் 25 நிமிடங்கள் வரை  காத்திருந்து, பிறகு கழுவவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments