Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!

Webdunia
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல்  காக்கும்.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
 
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம். சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.
 
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும். கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் இது நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரியும்.
 
கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள 'கிளைசீமி இன்டெக்ஸ்' உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
 
கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது.இனிப்பு உணவுகளில் நாம் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையை சேர்த்து பயன்படுத்தும் இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை இனிப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து நமது உடலில்  பற்களும், எலும்புகளும் வலுப்பெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments