Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!

Webdunia
தக்காளிப் பழச்சாற்றிலுள்ள வலி நிவாரணத் தன்மை உடல் வலியையும் குறைக்கிறது. குறைந்தளவில் நன்கு நீரில் கலக்கப்பட்ட, இனிப்பூட்டப் பட்ட  தக்காளிச்சாற்றை தொடர்ந்து குடித்துவர கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்று மற்றும் நச்சுக்கிருமிகள் நீங்கும்.

தக்காளியைப் பிழிந்து, விதை மற்றும் தோலை நீக்கி, வடிகட்டி, வெறும் சாற்றுடன் கற்கண்டு அல்லது சீனி கலந்து சாப்பிடுவதாலும், நன்கு பழுத்த  தக்காளிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சீனி கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதாலும் உடல் உஷ்ணம் தணியும்.
 
தக்காளியை சூடு செய்யாமல் வடிகட்டி அப்படியே சாப்பிடுவதால் சிறுநீர் கிருமித்தொற்று நீங்குகிறது. ஆனால் தக்காளியை தோல் மற்றும் விதையுடன் சேர்த்து  உட்கொள்வதால் சிறுநீர்ப் பாதையில் சுண்ணாம்பு, யூரிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் சத்து சேகரிக்கப்பட்டு, கற்கள் உண்டாகிவிடுகின்றன.
 
பச்சை தக்காளிச்சாறு உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர்ந்து வெப்பத்தாக்குதலை நீக்க தக்காளியை அடிக்கடி உட்கொள்ளலாம்.  தக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் உணவுப்பாதை, சிறுநீர்ப்பாதை மற்றும் புராஸ்டேட் கிளான்டில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுவதாக அறிவியல்  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
கோடைகாலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் தோல் மென்மையடைவதுடன் குளிர்ச்சியும்  உண்டாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments