Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமிர மோதிரம் மற்றும் காப்பு அணிந்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

Webdunia
ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு குணப்படுத்தும் குணம் உள்ளது. ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவும்.


அனைத்து உலோகங்களை  விடவும் மிகவும் பழமைவாய்ந்த உலோகம் என்றால் அது தாமிரம்தான். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். 
 
தாமிரத்தை அணிவது மட்டுமின்றி அந்த பாத்திரத்தில் சாப்பிடுவதும் கூட உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன் உங்களை தொற்றுநோய்களில்  இருந்து பாதுகாக்கும். இந்த காப்பர் சாஸ்திரரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.
 
காப்பர் மோதிரம் அணிவது கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. விரல்களில் செம்பு மோதிரம் அணிவது உங்கள் உடலில் நச்சுப்பொருட்களின் அளவு அதிகரிப்பதை குறைக்கும். மேலும் இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
 
வாஸ்து சாஸ்திரத்தின் படி செம்பு மோதிரம் அணிவது உங்கள் வீட்டின் வாஸ்துவை சிறப்பானதாக மாற்றும். இது உங்கள் வீட்டின் சூழ்நிலையை சுத்தமாக  வைத்திருப்பதுடன் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் நேர்மறை சக்திகளை அதிகரிக்கவும் செய்கிறது.
 
சூரிய மண்டலத்திலேயே சூரியன்தான் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரமாகும். இது உங்கள் மீது நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தும், கெட்ட விளைவுகளையும்  ஏற்படுத்தும். செம்பு மோதிரத்தை அணியும் போது அது உங்களின் தனிப்பட்ட நேர்மறை சக்தியை அதிகரிப்பதுடன் சூரியனால் ஏற்படும் கெட்ட பாதிப்புகளை  தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments