Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் சோளம் !!

Webdunia
சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. நார்ச்சத்து நமக்கு கிடைப்பதால் பல நோய்கள் உடலில் வராமல் தடுக்கிறது. 

மக்காச்சோளம் அதிகமாக சாப்பிடுவதால், மலசிக்கல் போன்ற பிரச்சனை நீக்குகிறது. மேலும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமைகிறது.
 
சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.
 
சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றது. தயாமின் சத்து உடலில் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும். 
 
அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் இதிலிருக்கும் ஃபோலிக் ஆசிர் மனித உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக இருக்கிறது.
 
கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.
 
கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கும் பிறக்கும் குழந்தை சரியான எடை இல்லாமல், குறைவாக பிறக்கும் நிலை ஏற்படும். அவர்களின் வயிற்றின் உள்ளே வளரும் குழந்தைக்கு சோளம் பெருமளவு உதவுகிறது.
 
நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. தினமும் சாப்பிட்டு வந்தால் கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமான தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments