Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...?

Webdunia
தனூர் என்றால் "வில்" என்று பொருள். இந்த ஆசனம் வில்லை போன்ற உடலை வளைப்பதால் தனூராசனம் என பெயர் பெற்றது. 


இந்த ஆசனத்தில் மேரு தண்டம்  போன்ற முதுகெலும்பே வில்லாக வளைக்கப்பட்டு, கால்களும், கைகளும் நான் கயிறுகளாக பூட்டப்பட்டுள்ளன.
 
விரிப்பில் குப்புற படுத்து கைகளால் கால்களை இறுக பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் கால்களை இழுத்து தலையையும்  கழுத்தையும் மேலே தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை படத்தில் இருப்பது போன்று கொண்டுவரவும்.
 
ஒரு முறைக்கு ஐந்து முதல் பதினைந்து வினாடியாக மூன்று முதல் ஐந்து முறை செய்யலாம். ஆரம்பத்தில் கால்களை விரித்து செய்யவும்.பின் பிக மெதுவாக  சுருக்கவும்.
 
பலன்கள்:
 
முதுகெலும்பின் வழியாக ஓடும் அத்தனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும். ஜீரண சக்தி அதிகப்படும். சோம்பல் ஒழியும். கபம் வெளியேறும். தொந்தி கரையும், மார்பு விரியும், இளமைத்துடிப்பு அதிகரிக்கும். 
 
அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தொந்தி, வயிற்ருக் கொழுப்பு, ஊளைச்சதை நீங்கும். பாங்கிரியாஸ் மற்றும் சிறுநீர்க் கருவிகள் நன்கு வேலை செய்யும்.  ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். பெண்களின் கர்ப்பப்பை பலப்படும். மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும். இளமைப்  பொலிவு உண்டாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments